Waterfalls in Tamil Nadu: கோடை காலத்துல குடும்பத்தோட டூர் போவீங்களா? இந்த அருவிகளுக்கு கட்டாயம் போகணுமே
பரபரப்புடன் புறப்பட்டு அரைகுறையாக சாப்பிட்டு ஓடியாடி வேலை செய்து, பிறகு அலுப்புடன் வீடு திரும்பும் அன்றாட நிகழ்வுகளால் ஏற்படும் மனம் மற்றும் உடல் சோர்வுக்கு அருவிக் குளியல் அருமையான மருந்தாகும்.அப்படிப்பட்ட அருமையான, அருமருந்தாக அமையும் அருவிக் குளியலை மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள முதன்மையான அருவிகள் குறித்த தகவல்களை இந்த பக்கத்தில் விரிவாக பார்க்கலாம்.

 

​கும்பக்கரை அருவி

 



தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இடம் தான் கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் உருவாகும் இந்த அருவியின் நீர், மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவியாக கொட்டுகிறது. ஆண்டு முழுவதிலும் இங்கு தண்ணீர் வரத்து இருக்கும்.


​குரங்கு அருவி




கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் இடத்தில் உள்ளது குரங்கு அருவி. இதற்கு அருகில் தான் ஆழியாறு அணை உள்ளது. 60 அடி உயரத்திற்கு மேலே இருந்து விழும் இந்த அருவிக்கு மேலே வால்பாறை, டாப் ஹில்ஸ் மற்றும் ஆழியாறு அணை போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.


​கேத்ரின் அருவி




இது நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகேவுள்ளது கேத்ரின் அருவி. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரவேனுவில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது கேத்ரின் அருவி. இது நீலகிரி மலைப்பகுதியில் இரண்டாவது அருவி ஆகும்.